×

சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்எல்ஏ?.. அமளியில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் இன்று கூடியபோது, பாஜக எம்எல்ஏ ஜாதவ், ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக கேள்வியெழுப்பி எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்நிலையில் இன்று திரிபுரா சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜக எம்எல்ஏ ஜாதவ், ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக கேள்வியெழுப்பி எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாஜக-திப்ரா மோதா எம்எல்ஏக்கள் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, மோதலில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

The post சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்எல்ஏ?.. அமளியில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Legislative ,Assembly ,Agartala ,Tripura Legislative Assembly ,BJP ,MLA ,Jadhav ,
× RELATED தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏ காலமானார்!!